Friday, June 1, 2007

En Aasai

அது ஒரு மாலை பொழுது
மெல்லிய தென்றல் நம்மை தழுவிச்சென்றது
நீ எனொ அன்று மிக சந்தொஷமாய் இருந்தாய்
உனக்குள் நீயே சிரித்து கொன்டாய்
அதை பார்த்து உன் ஆசைகள் என்னென்ன என்றேன்
என்னை முதல் முறை பார்பது போல பார்தாய்
பிறகு சொன்னாய்
நாம் இருவரும் ஒன்றாக மழையில் நனையமென்று
ஆனால் பிறகு எனக்கு ஜலதோஷம் பிடிக்க
கூடாது என்றாய் குரும்பாக
நாம் இருவரும் வாரம் ஒரு முறை
Jogging போக வென்டுமென்றாய்
நீயும் நானும் கன்வர்டிபில் காரில்
யாருமில்லா தெருவில் நீ ஓட்ட
நான் வானில் உள்ள‌ நக்ஷ்த்திரங்களை
பார்தபடி வரவேன்டும் என்றாய்
அற்புதம் என்றேன்
இரவில் மெழுகின் ஒளியில்
உன் முகம் பார்த்த படி
நான் துங்கவேண்டும் என்றாய்
நான் சொல்ல‌ வார்த்தையில்லாமல் தவித்தென்
வாரம் ஒரு முறை நான் சமைக்க
நீ ருசிக்க வேண்டுமென்றாய்
நான் சிரித்தென்
இருவரும் புத்தகம் ஒன்றாக‌
படிக்க வேண்டுமென்றாய்
ஒன்றாக கனவுகள் பல
கானவேண்டுமென்றாய்
நான் உன் தலைமுடியை சிலசமயம்
கோதவேண்டுமென்றாய்
நான் உன்னை இரசித்தேன்
நான் உன்னை பார்த்து அடிகடி
சிரிப்பேன் என்றாய் ‍ _ நான்
நீ அதிகம் அதுதானெ செய்கிறாய் என்றேன்
அதற்கும் சிரித்தாய்

நாம் 10/10/10 ‍ - ல் கல்யாணம்
பண்ணிக்கலாம் என்றாய்
மெய்சிலிர்த்து போனென்

பிறகு உங்கள் ஆசை என்னவெண்றாய்
நான் உன் ஆசைகளை நிறைவேற்றுவது
என்றேன் ‍ - நீ அதற்கு என் நெற்றியில்
முத்தம் தந்து என் தொளில்
தலை சாய்த்து கோண்டாய்

No comments: