ஒரு முக்கியமான விஷயம் என்றாய்
நான் ஆவலுடன் என்னவென்றேன்
நேற்று என் கனவில் நீ வந்தாய் என்றாய்
ஓ! பிறகு என்றேன்
நீங்களும் நானும் ஒரு புல் வெளியில்
நடந்து சென்றோம் என்றாய்
கனவில் கூட உனக்கும் எனக்கும்
ஆறு அடி இடைவெளி விட்டு
நடந்து சென்றாயா என்றேன்
புரியாமல் என்னை பார்த்து சிரித்தாய்
அடியே கனவில் நான் உன்
கண்ணினுள் அல்லவா இருந்திருக்கிறேன்
பிறகு உனக்கும் என்க்கும் ஏது
இடைவெளி என்றேன்
புரிந்தது போல சிரித்தாய்
சரி இனி நிறைய கணவு கான் என்றேன்
ச்சீ என்றாய் :- )
Friday, June 1, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment